Published : 13 Mar 2018 09:34 AM
Last Updated : 13 Mar 2018 09:34 AM

ஐஷர் மோட்டார்ஸ், போலாரிஸ் கூட்டணி முறிந்தது

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் அமெரிக்காவின் போலாரிஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் முறிந்து போனது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரு நிறுவனங்களும் பன்னோக்கு வாகன தயாரிப்புக்காக இணைந்தது. மல்டிக்ஸ் என்ற பெயரில் வாகனமும் தயாரிக்கப்பட்டு 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ரூ. 290 கோடியை ஐஷர் முதலீடு செய்திருந்தது.

தொடக்கத்தில் இந்த வாகனத்துக்கு பெருமளவு வரவேற்பு இருந்தது. சொந்தமாக தொழில் புரியும் தனி நபர்களுக்கு ஏற்றதாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதாவது வாகனத்தில் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும், மின்சாரம் இல்லாத சமயத்தில் இதை ஜெனரேட்டராகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மார்ச்சில் முடிவடைந்த நிதி ஆண்டில் ஐஷர் போலாரிஸ் நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 91.82 கோடியாக உயர்ந்தது. இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் கூட்டணியை முறித்துக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், உதிரி பாகங்கள், விற்பனைக்குப் பிந்தைய சேவை போன்றவற்றை ஐஷர் நிறுவனம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x