

தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனங்களில் இன்னும் பெண் இயக்குநர்கள் நியமிக்கப்படவில்லை. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இயக்குநர் குழுவில் இடம் பெற வேண்டும் என்று செபி உத்தரவிட்டது. இதற்கு அக்டோபர் 1 வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.
என்.எஸ்.இ.-யில் இருக்கும் 1469 நிறுவனங்களில் 755 நிறுவ னங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை. (ஆகஸ்ட் 31 நிலவ ரப்படி). ஒரு நாளைக்கு 25 நியமனங்கள் என்ற அடிப்படையில் நிறுவனங்கள் செயல்பட வேண்டும். செபி உத்தரவுக்கு பிறகு 264 நிறுவனங் களில் இயக்குநர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இதில் கணிசமானவை நிறுவனத்தின் புரமோட்டர் குழுமத்தை சேர்ந்தவர்கள்.இந்த 1,469 நிறுவனங்களில் இதுவரை நியமிக்கப்பட்ட அல்லது ஏற்கெனவே இருக்கும் பெண் இயக்குநர்களின் விகிதம் 7.1 சதவீதம் மட்டுமே.