

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நடுத்தர கால டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கிறது.
ஒரு வருடம் முதல் மூன்று வருட டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதமாக எஸ்.பி.ஐ. குறைத்திருக்கிறது.
இந்த புதிய வட்டி விகிதம் வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதே சமயம் குறுகிய கால வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
180 முதல் 210 நாட்களுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.