Published : 27 Sep 2014 10:40 AM
Last Updated : 27 Sep 2014 10:40 AM

எஸ்.கே. சர்மா - இவரைத் தெரியுமா?

$ பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இந்த ஆண்டு ஜனவரி முதல் பணியாற்றுகிறார்.

$ 1978-ம் ஆண்டு இந்நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்து இப்போது தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.

$ மின்னணு போர் ஆயுதங்கள், விமான பகுதிகள், ஒருங்கிணைப்பு, ரேடார் மற்றும் அது சார்ந்த பொருள்கள் உள்ளிட்ட துறைகளில் மிகுந்த அனுபவம் உடையவர். பெங்களூர், காஜியாபாத், ஹைதராபாத் ஆகிய தொழிற்சாலைகளில் பணியாற்றியுள்ளார்.

$ பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ஜிஇ பிஇஎல் பிரைவேட் லிமிடெட், பெல் மல்டிடோன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் உள்ளார்.

$ பெங்களூர் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x