

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக (ஜேஎம்டி) சுதர்சன் வேணு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசனின் மகனான சுதர்சன் 2013-ம் ஆண்டிலிருந்து நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக உள்ளார்.
இவரது சகோதரி லட்சுமி வேணு நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் கூடுதல் இயக்குநராக(பொறுப்புகள் இல்லாத) இணைய உள்ளார். 24 வயதாகும் சுதர்சன் வேணு கடந்த ஓராண்டாக நிறுவன செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.