Published : 29 Mar 2018 09:14 AM
Last Updated : 29 Mar 2018 09:14 AM

மீண்டும் பணியாற்ற விரும்பும் பெண்களுக்காக ஹெச்சிஎல் பயிற்சியுடன் பணி வாய்ப்பு

மீண்டும் பணியாற்ற விரும்பும் பெண்களுக்காக ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் வாய்ப்புகளை வழங்க உள்ளது. இதற்காக `ஐ பிலீவ்’ என்கிற திட்டத்தினை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் அந்த நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கூறுகையில்,

இந்தியாவில் பெண்கள் தொடர்ச்சியாக பணியாற்றும் விகிதம் குறைவாகவே உள்ளது. திருமணம், குழந்தை பிறப்பு போன்ற காரணங்களால் பணியிலிருந்து விலகுபவர்களில் 65 சதவீதம் பேர் மீண்டும் பணிக்கு சேர்வதில்லை. ஆனால் ஒரு இடைவெளிக்கு பின்னர் வேலைக்குச் செல்லும் மனநிலை வந்தாலும், தாங்கள் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவத்துடன் அதே போன்ற பணியிடத்துக்கு செல்ல முடியாத நிலைமைதான் உள்ளது. இதனால் மீண்டும் வேலைக்குச் செல்ல நினைக்கும் பெண்களுக்காகவே இந்த திட்டத்தினை தொடங்கியுள்ளோம்.

ஐடி துறை சாராத பிற பணிகளில் அனுபவம் கொண்ட பெண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களது ஆர்வம், பயிற்சி அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஏற்கெனவே பணியாற்றிய பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு மாதம் முதல் 3 மாத காலம் வரை பயிற்சி அளிக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2.50 லட்சமாக நிர்ணயித்துள்ளோம். பயிற்சிக்கு பின்னர் அவர்களது அனுபவம் திறனுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும். இந்த திட்டத்தினை முதற்கட்டமாக சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் அறிமுகம் செய்துள்ளோம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x