Published : 22 Mar 2018 09:14 AM
Last Updated : 22 Mar 2018 09:14 AM

மே 10-ம் தேதிக்குள் ரூ.200 கோடியை செலுத்த வேண்டும்: ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் வரும் மே மாதம் 10-ம் தேதிக்குள் ரூ.200 கோடியை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. முதல் தவணையாக ஏப்ரல் மாதம் 6-ம் தேதிக்குள் ரூ.100 கோடியும் அடுத்த தவணையாக மே மாதம் 10-ம் தேதிக் குள் ரூ.100 கோடியும் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டி ருக்கிறது.

தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரும் இருந்தனர். இந்த உத்தரவில், வீடு வாங்கியவர்கள் ரீபண்ட் கேட்கும் பட்சத்தில் அவர் கள் இஎம்ஐ செலுத்தவில்லை என்பதற்காக அவர்களுக்கு எந்தவிதமான நோட்டீஸும் அனுப்பக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளறது.

ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு நபர்கள் வீடு வேண்டாம் என திருப்பி கேட்டிருக்கிறார்கள் என்னும் தகவலை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை சமர்ப்பிக்கும் பட்சத்தில்தான் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை பகிர்ந்தளிக்க முடியும். இப்போதைக்கு வீடு வேண்டாம் என்பவர்கள் குறித்து கவனம் செலுத்துவோம். வீடு வேண்டும் என்பவர்கள் குறித்து பிறகு பார்க்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 31,000 நபர்கள் எங்களிடம் வீடு வாங்கி இருக்கிறார்கள். இதில் 8 சதவீதத்தினர் மட்டுமே பணத்தை திருப்பி கேட்கின்றனர் மீதமுள்ள நபர்கள் தங்களுக்கு வீடு தேவை என கேட்டிருக்கிறார்கள் என ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் தெரிவித்திருக்கிறது. மேலும் 13,500 வீடுகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 25-ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவு படி 125 கோடி ரூபாயை ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் செலுத்தியது. முதலீட்டாளர்களின் நலனுக்காக இந்த தொகையை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது.

ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனம் மீது ஐடிபிஐ வங்கி திவால் நடவடிக்கையை தொடுத்தது. ஆனால் பல ஆயிரம் முதலீட்டாளர்கள் பாதிப்படைவார்கள் என்பதால் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நிறுத்தியது. நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 2.50 சதவீதம் சரிந்து முடிந் தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x