Published : 06 Mar 2018 09:19 AM
Last Updated : 06 Mar 2018 09:19 AM

மகளிர் தினம்: பெண்கள் இயக்கிய ஏர் இந்தியா விமானம்

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, கடந்த ஞாயிறன்று ஏர் இந்தியா ஏர்பஸ் 319 ரக விமானத்தை முழுக்க முழுக்க பெண் ஊழியர்களைக் கொண்டு இயக்கியுள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், கொல்கத்தா-திமபூர்- கொல்கத்தா வழித் தடத்தில் இந்த விமானம் இயக்கப்பட்டது. விமானத்தை கேப்டன் அகான்ங்ஷா வெர்மா, கேப்டன் சட்டோவிசா பானர்ஜி இருவரும் இயக்கினார்கள். மேலும் விமானப் பணிப்பெண்களாக டி. பூட்டியா, எம்.ஜி. மோகன்ராஜ், டி கோஷ் மற்றும் யாத்திலி காத் போன்றோர் இருந்தனர் என்றும் கூறியுள்ளது.

இந்த வாரத்தில் மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதத்தில் மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x