

பன்னாட்டு நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக் (ஜிஇ) நிறுவனம் இந்தியாவுக்கு ஏற்ற காற்றாலை மின்னுற்பத்தி டர்பைன்களை வடிவமைத்துள்ளது.
இந்தியாவில் வீசும் குறைவான வேகத்திலான காற்றிலும் செயல்படும் வகையில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி டர்பைன்கள் உள்ளன.
இத்தகைய 100 மெகா வாட் காற்றாலை உற்பத்தி செய்யும் மின்சாரம் மூலம் 4.13 லட்சம் வீடுகளில் மின் விளக்கு எரியும் என்று நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் பன்மாலி அகர்வாலா தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜிஇ நிறுவனம் தயாரித்துள்ள 22 ஆயிரம் காற்றாலை டர்பைன்கள் பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் உள்ளன.