இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 ஆண்டுகளின் மந்தநிலையில் 5.8% : சீனாவை விட பின் தங்கியது

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 ஆண்டுகளின் மந்தநிலையில் 5.8% : சீனாவை விட பின் தங்கியது
Updated on
1 min read

2018-19 ஜனவரி - மார்ச் காலாண்டில் வேளாண்மை மற்றும் உற்பத்தித் துறைகளின் மந்த நிலை காரணமாக 5 ஆண்டுகளின் கீழ்நிலையை எட்டிய பொருளாதார வளர்ச்சி 5.8% ஆக உள்ளது. 

மே 31ம் தேதி வெளியான அதிகாரபூர்வ தரவுகளின் படி ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2018-19ம் ஆண்டில் 6.8% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு 7.2% ஆக இருந்தது.

2014-15 முதலே ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மந்தமாகவே இருந்து வருகிறது. முன்னதாக 2013-ல் மந்த நிலை 6.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 4ம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி சீனாவின் 6.4%க்கும் கீழ் குறைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in