

தனியார் வங்கி தலைவர் பதவிக்கு வயது உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருக்கிறது. இதன்படி நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் முழு நேர இயக்குநர் ஆகியோர்களுக்கான வயது உச்ச வரம்பை 70-ஆக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருக்கிறது.
இதன் படி 70 வயதுக்கு மேலே இருப்பவர்கள் தனியார் வங்கியின் முக்கியமான பொறுப்புகளில் இருக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் தனியார் வங்கி களின் இயக்குநர் குழு இந்த உச்சவரம்பை தேவைப்பட்டால் குறைத்துக்கொள்ளலாம். அது சம்பந்தப்பட்ட வங்கிகளின் உள்விவகாரம் என்றும் கூறியி ருக்கிறது.
எந்த ஒரு நிறுவனமும் 21 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 70 வயது பூர்த்தியா னவர்களை நிர்வாக இயக்கு நராகவோ முழுநேர இயக்குநரா கவோ நியமிக்கக்கூடாது என்று கம்பெனி சட்டம் 2013 தெளிவாக வரையறுத்துள்ளது.