

ரேஞ்ச் ரோவர், ஜாகுவார் இது இரண்டுமே என்னோட பேவரிட். கார்களில் எனக்கு வெள்ளை நிறம்தான் எப்போதுமே இஷ்டம். அது ஒரு ராயல் நிறம் என்றே சொல்லலாம்.
ஜாகுவார் காரைப் பார்க்கும்போது ஒரு ஸ்போர்ட்ஸ் கார் மாதிரி தெரியும். அதேபோல, அதோட இருக்கைகளை நாம் விரும்பும் வண்ணத்தில் மாற்றிக்கொள்ளலாம்.
ரேஞ்ச் ரோவர் நம்ம ஊர் சாலைகளுக்கு ஏற்ற வாகனம். நல்ல உயரம், பெரிய ஜீப் மாதிரியான அதன் பிரம்மாண்டம் எனக்குப் பிடிக்கும். ஒரு பெரிய ரேஞ்ச் ரோவர் காரின் உட்புறம் அமர்ந்து பயணிக்கும்போது பூமியை தொட்டுக்கொண்டே பயணிப்பதைப்போல பலமுறை உணர்ந்திருக்கிறேன்.