அசோக் சாவ்லா - இவரைத் தெரியுமா?

அசோக் சாவ்லா - இவரைத் தெரியுமா?
Updated on
1 min read

$ இந்திய தொழில் நிறுவனங்களிடையே போட்டிகளை நெறிபடுத்தும் அமைப்பின் (சிசிஐ) தலைவர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் 40 ஆண்டுகள் மத்திய மற்றும் மாநில அரசின் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

$ 2011 ஜனவரி மாதம் மத்திய நிதிச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற இவர், சிசிஐயின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2016 ஜனவரி வரை இந்த பொறுப்பில் இருப்பார்.

$ 1973-ம் ஆண்டு இந்திய ஆட்சி பணியின்(ஐ.ஏ.எஸ்) குஜராத் கேடரில் இணைந்தார். அங்கு பல முக்கிய துறைகளிலும், மாநில நிறுவனங்களின் தலைவராகவும் இருந்தார்.

$ மத்திய அரசிலும் பல முக்கியமான பொறுப்புகளை வகித்தார். காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும் நிதி, பொருளாதார விவகாரங்கள், விமான போக்குவரத்து துறையின் செயலாளராகவும் இருந்தார்.

$ தவிர, ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவிலும், ஓ.என்.ஜி.சியின் இயக்குநர் குழுவிலும் இருந்தார்.

$ டெல்லி பொருளாதார கல்லூரியில் முதுகலை பொருளாதாரம் படித்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in