

ஆட்டோமொபைல் துறைக்கான டயர், டயூப்களைத் தயாரிக்கும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் ஹங்கேரியில் புதிய ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. ரூ. 3,450 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமைய உள்ளது. இந்த ஆலை அமைப்பதற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆலை அமைக்கப்படுவதன் மூலம் 975 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஹங்கேரியின் வடக்குப் பகுதியில் உள்ள கைல் எனுமிடத்தில் இந்த ஆலை அமைய உள்ளது.