

இந்தியாவின் நிதி நிலை ஸ்திரமாக உள்ளது என்று சர்வதேச தரச்சான்று நிறுவ னமான ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் மற்றும் மத்தியில் நிலையான ஆட்சி அமைந்துள்ளது ஆகிய காரணங்களால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் அது கணித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எஸ் அண்ட் பி நிறுவனம் இந்தியாவின் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை (கிரெடிட் ரேட்டிங்) உயர்த்தி குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்த்ககது. முன்பு மைனஸ் இலக்கத்தில் இந்தியாவை தரவரிசைப்படுத்தியிருந்த இந்நிறுவனம் இப்போது இக்கருத்தை வெளி யிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.