Published : 21 Sep 2014 10:21 AM
Last Updated : 21 Sep 2014 10:21 AM

சரக்கு மற்றும் சேவை வரியை 2016-ல் அமல்படுத்துவது சாத்தியமே: வருவாய் துறை செயலாளர் சக்தி காந்த தாஸ்

சரக்கு மற்றும் சேவை வரி குறித்து மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம். வரும் ஏப்ரல் 2016 முதல் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டுவருகிறது என்று மத்திய வருவாய் துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

ஜிஎஸ்டியை அமல்படுத்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இலக்கை அடைவது சாத்தியம் என்றார். ஆனாலும் முக்கிய பிரச்சினைகளில் மாநில அரசுகளுடன் எவ்வளவு விரைவாக கருத்தொற்றுமை ஏற்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே இது இருக்கும் என்றார் அவர். முந்தைய மத்திய அரசு 2011-ம் ஆண்டு மக்களவையில் ஜிஎஸ்டி தொடர்பான சட்ட திருத்தமசோதாவை அறிமுகப் படுத்தியது.

2006ம் ஆண்டு முதலே இந்த வரி முறை கிடப்பில் இருக்கிறது. பெட்ரோலியம், புகையிலை மற்றும் மதுபானப்பொருட்கள் ஆகியவை ஜிஎஸ்டி வரம்பில் வரக்கூடாது என்று மாநில அரசுகள் கூறுகின்றன.

இதற்குரிய இழப்பீட்டை ஐந்து வருடங்களுக்கு தரவேண்டும் என்றும் இதுதொடர்பாக மசோதாவில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்திருகின்றன. 4 அல்லது 5 விஷயங் களில் மாநில அரசுகளுடன் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. இவை தொடர்பான விவாதம் இப்போது முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் இந்த விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாக தாஸ் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக பல முறை நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறையை அமல்படுத்த முடியவில்லை.

அதனால் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு மாற்றுதிட்டம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x