

கடந்த செப்டம்பர் மாதம் ரூ.20,000 கோடிக்கும் மேல் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இதில் பங்குச் சந்தையில் நிகர முதலீடாக ரூ.5,117 கோடியும், இந்திய கடன் சந்தையில் ரூ.15,308 கோடியும் அந்நிய முதலீடு வந்திருக்கிறது.
மொத்தம் ரூ.20,425 கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இது செப்டம்பர் 1 முதல் 26 வரையிலான தகவல்கள் மட்டுமே. இந்த அந்நிய முதலீடு தொடரும் என்றே சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வரும் காலத்தில் டீசல் விலையை சந்தையிடம் ஒப்படைப்பது, எரிவாயு விலையை நிர்ணயிப்பது, நிலக்கரி சுரங்கங்களை மறு ஏலம் விடுவது உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அந்நிய முதலீடு இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தார்கள்.