

இமாமி நிறுவனத்தின் முகப்பூச்சு கிரீம் தயாரிப்பில் காட்டப்படும் வாசகம் ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் என்பது இந்துஸ்தான் யூனிலீவரின் ‘ஃபேர் அண்ட் லவ்லி’ யை இழிவுபடுத்தவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
நீதிபதி ஜெயந்த் நாத் முதற்கட்டப்பார்வையில் இமாமி நிறுவனத்தின் அழகு கிரீம் இந்துஸ்தான் லீவர் அழகு கிரீமை இழிவுபடுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
“இமாமி நிறுவனத்தின் வர்த்தக விளம்பர வாசகம் எந்த விதத்திலும் இந்துஸ்தான் நிறுவனத்தின் பொருளை இழிவு படுத்துவதாக அமையவில்லை. முதற்கட்ட பார்வையில் இமாமி தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்துஸ்தானின் ஃபேர் அண்ட் லவ்லியை இழிவு படுத்துவது போன்று இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறேன் என்று மறுத்துள்ளார்.
இமாமி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பொருளை இழிவுபடுத்துவது சரிசம போட்டியையும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கடைபிடிப்பதாக இந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் வழக்கு விசாரணை ஜூலை 11ம் தேதி முழுதும் நடைபெறுகிறது.
அதாவது ஃபேர் அண்ட் லவ்லி என்பது பெண்கள் பயன்படுத்துவது ஆகவே அதை ஆண்களும் பயன்படுத்துகின்றனர் என்பதைப் போல் இமாமி நிறுவனம் ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் என்று தங்கள் முகப்பூச்சை விளம்பரம் செய்ததாகவே இந்துஸ்தான் லீவர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக இமாமி நிறுவனம் இந்துஸ்தான் நிறுவனத்தின் பொருளை கேலி செய்வதாக எடுத்து கொள்ள முடியாது, மேலும் அப்படி எடுத்துக் கொள்வது அபத்தம் என்று கோர்ட் தெளிவுபடுத்தியது.
இந்துஸ்தான் நிறுவனம் தன் பிரமாணப்பத்திரத்தில் தங்களது ஃபேர் அண்ட் லவ்லியில் இருக்கும் ஒரு மூலப்பொருள் நியாசினமைட் ஆண், பெண் இருதரப்பு சருமங்களிலும் வேலை செய்யும் என்று பதறிப்போய் குறிப்பிட்டுள்ளது. மேலும் பொதுவாக இது போன்ற அழகு கிரீம்கள் ஆண்களுக்கானதா பெண்களுக்கானதா என்று யாரும் பார்க்காத போது ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் என்று விளம்பரம் செய்வது எங்கள் பொருளை பெண்களுக்கானது என்பதாக காட்டுவது போல் தெரிகிறது என்பது இந்துஸ்தான் லீவரின் கண்டனம்.
2006-ல் ஆண்களையும் கிரீமுக்கு வரவைக்க இந்துஸ்தான் லீவர் ஃபேர் அண்ட் லவ்லி மென் என்று பிராண்டை உருவாக்கியது. பிறகு இது மென்’ஸ் ஃபேர் அண்ட் லவ்லி என்று ஆனது. மேலும் இமாமி தன் பொருளுக்கான விளம்பரத்தில் இன்னொரு முகப்பூச்சு கிரீம் டியூபைக் காட்டுகிறது அதன் நிறம் தங்களின் ஃபேர் அண்ட் லவ்லி போலவே உள்ளது என்று கூறுகிறது இந்துஸ்தான்.
ஆனால் இமாமி என்ன கூறுகிறது எனில், பெண்கள் சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட கிரீம்கள் வேறு ஆண்கல் சருமத்திற்காக உருவாக்கப்படும் கிரீம்கள் வேறு என்கிறது.
இந்தப் பிரச்சினை தலைதூக்கியவுடன் விளம்பரத்தில் இமாமி நிறுவனம் காட்டும் மற்றொரு டியூபின் நிறத்தை வெள்ளையாக மாற்றி விட்டது. இந்துஸ்தான் டியூபில் உள்ள இருமுக பிம்பமும் தற்போது இமாமி விளம்பரத்தில் வருவதில்லை.