

மின்னணு சாதனங்கள் கண்காட்சி பெங்களூரில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கில் (பிஐஇசி) இம்மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
மூன்று நாள்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியில் இந்தியாவின் முன்னணி மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பல நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக மின்னணு நிறுவனங்களின் சங்கத் தலைவர் என்.கே. கோயல் தெரிவித்துள்ளார்.
அரசு சார்ந்த மின்னணு நிறுவனங்கள் மற்றும் 15 துறை சார்ந்த நிறுவனங்களும் இக்கண்காட்சியில் கலந்து கொள்கின்றன. ஜெர்மனி, சீனா, ஹாங்காங், தைவான், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச்சேர்ந்த நிறுவனங்களும் இக்கண்காட்சியில் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன. இக்கண்காட்சியில் 15 ஆயிரம் வர்த்தகர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.