

ஹெல்த்கேர் பிரிவில் செயல்பட்டு வரும் அமெரிக்க நிறுவனமான டிரைஜெட்டோ நிறுவனத்தை காக்னிசென்ட் 270 கோடி டாலர்கள் கொடுத்து வாங்கியிருக்கிறது. 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது டிரைஜெட்டோ நிறுவனம். அமெரிக்காவில் 13 அலுவலகங்களும் இந்தியாவில் இரண்டு அலுவல கங்களும் இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் இந்த நிறுவனத்துக்கு இருக்கிறார்கள்.
காக்னிசென்ட் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் ஹெல்த் கேர் பிரிவு மூலம் 26 சதவீத வருமானம் கிடைக்கிறது. டிரைஜெட்டோவில் இருக்கும் 3,700 பணியாளர்களும் இனி காக்னிசென்ட் பணியா ளர்களாக மாறுவார்கள்.
ஹெல்த்கேர் துறையில் நடந்து வரும் மாற்றங்கள் காரணமாக இந்த துறை மேலும் வளர்ச்சி அடையும் என்றும், டிரைஜெட்டோ வாங்கியதன் மூலம் இந்த துறையில் கணிசமான வளர்ச்சி இருக்கும் என்று காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரான்ஸிஸ்கோ டி சௌசா தெரிவித்தார்.