Published : 29 Mar 2019 08:03 AM
Last Updated : 29 Mar 2019 08:03 AM

வருமான வரி வசூல் இலக்கை எட்டாததால் மத்திய நேரடி வரிகள் ஆணையம் கவலை

நடப்பு நிதி ஆண்டில் வருமான வரி வசூல் இலக்கை எட்டவில்லை என மத்திய நேரடி வரிகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

2018-19 நிதி ஆண்டில் வருமான வரி வசூல் இலக்கு 12 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால், இன்னும் சில தினங்களில் நிதி ஆண்டு முடியும் தருவாயில் உள்ள நிலையில், வரி வசூல் இலக்கு 85.1 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. அதாவது ரூ. 10.21 லட்சம் கோடி மட்டுமே எட்டப்பட்டது.

இலக்கு நிர்ணயிக்கப்பட் டதைக் காட்டிலும், வசூல் செய்யப்பட்ட வரியானது 14.9 சதவீதம் குறைவாக உள்ளது. மத்திய நேரடி வரிகள் ஆணையம் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளது.

வருமான வரி வசூல் குறைவது ஆரோக்கியமான தல்ல என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. நாடு முழுவதும் வருமானவரி வசூலைக் கண் காணிக்கும் அதிகாரி நீனா குமார் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு இது குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் எந்தெந்தப் பிரிவுகளில், எந்தெந்தப் பகுதிகளில் வருமான வரி வசூல் குறைந்துள்ளது என்பதை ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

மேலும் இதில் சிக்கல் என்னவென்றால், வருமான வரித் துறை அதிகாரிகள் மதிப்பிடும் வரி வசூல் கணக்கு ஒன்றாகவும், வசூலாகும் வரிக் கணக்கு வேறாகவும் இருப்பது தான் என்பதைக் குறிப்பிட் டுள்ளார்.

மேலும், வழக்கமான வரி வசூலில் எதிர்மறைப் போக்கு நிலவுவது பிரச்சினையை மேலும் அதிகப்படுத்துவதாக உள்ளது என கூறியுள்ளார். கடந்த வாரம் -5.2 என்ற நிலை யில் இருந்த வசூல் நிலை, இந்த வாரம் -6.9 ஆக அதிகரித் துள்ளது. இந்தப்போக்கு தொடர்ந்தால் பல பிரச்சினை கள் உருவெடுக்கும்.

எனவே உடனடியாக இதற் கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என்றார். எனவே வருமானவரித் துறை அதிகாரி கள் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, வரி வசூல் செய்வதில் பல்வேறு உத்தி களைப் பயன்படுத்துவது குறித்து மத்திய நேரடி வரிகள் ஆணை யத்தின் தலைவர் பிரமோத் சந்திர மோடி அனைத்து முக்கிய அதிகாரிகளுடனும் கலந்துரை யாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x