

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சாரிடம் விடிய விடிய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடாக நடந்துகொண்டதாக ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் மீது அரவிந்த் குப்தா என்பவர் 2017-ம் ஆண்டில் குற்றம்சாட்டினார் அவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா குழுவின் அறிக்கையில், சந்தா கோச்சார் வங்கி விதிமுறைகளை மீறியது உண்மைதான் என கூறியது. இதையடுத்து ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழு, சந்தா கோச்சாரின் அளித்த ராஜினாமவை, நிரந்தரப் அவரை பணியில் இருந்து நீக்கியது.
சாந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது. இந்தநிலையில், சாந்தா கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை நடவடிக்கையானது மும்பையில் உள்ள வீடியோ கான் நிறுவனத்தின் 5 அலுவலகங்கள் மற்றும் வேணுகோபால் தூத் வீட்டிலும் ஒருசேர நடத்தப் பட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளூர் போலீசாரின் உதவியோடு இந்த சோதனையை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாந்தா கோச்சாரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் இரவு முழுவதும் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதிகாலை 4.00 மணி வரை இந்த சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. இதில் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரின் முதலீடுகள், சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாகவும், மேலும் ஆவணங்களை கேட்டு பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் மீண்டும் காலையில் ஆஜராகுமாறு சாந்தா கோச்சாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கியது. அதனை ஏற்று காலையில் மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.