

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு கோரப்படும் இழப்பீடுகளை காப்பீட்டு நிறுவனங்கள் விரைந்து அளிக்க வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) உத்தரவிட்டுள்ளது. ஆயுள் காப்பீடு செய்தவர்களின் உறவினர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இதேபோல பொதுக்காப்பீட்டை மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் வெள்ள பாதிப்புக்கான இழப்பீடுகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் ஐஆர்டிஏ கேட்டுக் கொண்டுள்ளது. மாநிலத்தின் தலைமைச் செயலர் நியமித்துள்ள தொடர்பு அதிகாரி மூலமாக தகவல்களைப் பெற்று உரியவர்களுக்கு இழப்பீடுகளை விரைவாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.