Published : 06 Mar 2019 10:12 AM
Last Updated : 06 Mar 2019 10:12 AM

வர்த்தக சிறப்புரிமை நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்க ட்ரம்ப் கடிதம்: இந்திய ஏற்றுமதிகளுக்கு சிக்கல்

பொதுப்படையான சிறப்புரிமைகள் அமைப்பிலிருந்து இந்தியாவை நீக்கி முன்னுரிமை வர்த்தக அனுமதிகளை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக, அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிகளை அதிகரிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் முடிவை விளக்கி அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தலைவருக்கும் செனேட் தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அதாவது 121 வளரும் நாடுகளுடன் சிறப்புரிமை வர்த்தக உடன்படிக்கையில் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கு வரிகள் எதுவும் இல்லாமல் இருந்தது.  இதில் இந்திய ஏற்றுமதி சுமார் 5.6 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. ஆகவே ஜிஎஸ்பி என்று அழைக்கப்படும் இந்த வரிக்கட்டணம் அற்ற சிறப்புரிமை நாடுகளில் பெரிய பயனாளி இந்தியாவாகவே இருந்து வந்தது. இதைத்தான் ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டுவர தற்போது கடிதம் அனுப்பியுள்ளார்.

 

இந்த ஏற்றுமதிகளில் முக்கியப் பங்கு வகிப்பது  ரசாயனப்பொருட்கள், நவரத்னக் கற்கள், நகைப்பொருட்கள், பொறியியல் மற்றும் ஜவுளி ஆகிய துறைகள் அமெரிக்காவின் இந்த வரியற்ற சிறப்புரிமைத் திட்டத்திலிருந்து பயனடைந்து வரும் இந்தியத் தொழிற்துறைகள் ஆகும்.

 

அதாவது சமீபத்தில் மத்திய அரசு இ-காமர்ஸ் தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை விதித்தது அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகங்களுக்கு  அவ்வளவு திருப்தியளிக்கவில்லை.  “இந்தியா அமெரிக்க வர்த்தகத்துக்கு ஏகப்பட்ட வர்த்தக இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்க வர்த்தகத்திற்கு சீரியசான் சேதங்களை ஏற்படுத்தக் கூடியதாகும். இது தொடர்பாக பொறுப்புடன் இந்தியாவை அணுகியும் ஜிஎஸ்பி அளவுகோலை சந்திக்க இந்தியா எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டித்திருந்தார்.

 

அமெரிக்கப் பார்வையின்படி 2017-ல் ஜிஎஸ்பி சிறப்புரிமையின் படி அமெரிக்காவுக்குள் 21 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய பொருட்கள் வரியின்றி இறக்குமதியாகியுள்ளன.  மொத்த இறக்குமதி 2.3 ட்ரில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜிஎஸ்பியில் சிறப்புரிமை பெற இந்தியப் பொருட்களுக்கு அங்கு என்ன தகுதி நிலைகள் வழங்கப்பட்டு வரிவிலக்குகள் முற்றிலும் அளிக்கப்பட்டுள்ளதோ அதே போல் வர்த்தகப் பயன்களை அமெரிக்காவுக்கும் இந்தியா செய்ய வேண்டும் என்பது ஜிஎஸ்பி அளவுகோலாகும், இதனை இந்தியா தற்போது கடைபிடிக்கவில்லை என்பதே அதிபர் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டும் இத்தகைய நடவடிக்கைகளுக்குக் காரணமும் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x