Published : 12 Mar 2019 11:23 AM
Last Updated : 12 Mar 2019 11:23 AM

கச்சா எண்ணெய் சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு திட்டங்களில் இந்தியாவில் முதலீடு செய்ய சவுதிக்கு அழைப்பு: கிடப்பில் உள்ள ரூ.3.08 லட்சம் கோடி சுத்திகரிப்பு திட்டத்தை மீட்க நடவடிக்கை

இந்தியாவில் கச்சா எண்ணெய் சேமிப்பு தொடர்பான உத்திகளுக்காகவும், ரூ.3.08 லட்சம் கோடி மதிப்பிலான எண்ணய் சுத்திகரிப்பு திட்டத்தை மீட்கவும் தேவையான முதலீடுகளை மேற்கொள்ள சவுதிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சவுதியின் பெட்ரோலியத் துறை அமைச் சர் காலித் அல் ஃபாலி கடந்த மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது இந்தியாவில் கச்சா எண்ணெய் சேமித்து வைப்பது தொடர்பான உத்திகளிலும், மகாராஷ்ட்ர அரசு நிலம் தர மறுத்துவிட்டதால் கிடப்பில் கிடக்கும் எண்ணெய் சுத்தகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும் முதலீடு செய்ய வேண்டுமென சவுதி அமைச்சர் காலித் அல் ஃபாலியிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகாராஷ்ட்ராவின் கடற்கரை மாவட்டமான ரத்னகிரியில் 60 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோல் கெமிக்கல் ஆலையை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த மாத தொடக்கத்தில் திடீ ரென்று ஆலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் தர மகாராஷ்ட்ர மாநில அரசு மறுத்துவிட்டது. மத்திய பாஜக அரசுக்கும், மகாராஷ்ட்ர சிவ சேனா அரசுக்கும் இடையில் விரிசல் வந்து விடக் கூடாது என்பதற்காக, அரசு இந்தத் திட்டத்தை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்தது. இதனால், தற்போது ரூ.3.08 லட்சம் கோடி திட்டம் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாற்று இடம் இதுவரை அடையாளம் காணப்பட வில்லை. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த என்னென்னெ நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், சவுதி அராம்கோ மற்றும் அதன் கூட்டு நிறுவனமான அட்னாக் (ADNOC-அபுதாபி தேசிய எண் ணெய் நிறுவனம்) இந்தத் திட்டத்தில் 50 சதவீத பங்குகளை எடுத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள் ளது. மீதமுள்ள 50 சதவீத பங்குகளை, ஐஓசி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வசம் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் எண்ணெய் சேகரிப்பு உத்திகள் மற்றும் எண்ணெய் சுத்தகரிப்பு, பெட்ரோகெமிக்கல் துறைகளில் சவுதி முதலீடு செய்ய வேண்டுமெனவும் தர்மேந்திர பிரதான் சவுதி அமைச்சர் காலில் அல் ஃபாலியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இருநாட்டு அமைச்சர்களும் இதுகுறித்து ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இந்தியா தற்போது மங்களூர், படூர் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங் களில் அவசர கால எண்ணெய் தேவைக்காக 5.33 மில்லியன் டன் எண்ணெய் சேமிக்கும் கிடங்குகளை உருவாக்கியுள்ளது. இவை இந்தியாவின் 9.5 நாட்களின் எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 6.5 மில்லியன் டன் எண்ணெய் சேகரிப்பு கிடங்குகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற் காக வெளிநாடுகளின் முதலீடுகளை எதிர் பார்க்கிறது. இந்த சேகரிப்பு கிடங்குகளில் வெளிநாடுகள் முதலீடு செய்து எண்ணெய் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். இந்தியா வுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அவ சர காலத்தின் போது இந்தியா அதில் இருக் கும் எண்ணெயைப் பயன்படுத்திக்கொள் ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x