‘கேசியோ’ விளம்பரத்தூதர் ஏ.ஆர். ரஹ்மான்

‘கேசியோ’ விளம்பரத்தூதர் ஏ.ஆர். ரஹ்மான்
Updated on
1 min read

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் கேசியோ நிறுவனம் தனது தயாரிப்புகளை மேலும் பிரபலப்படுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை தனது விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. இந்நிறுவனத்தின் மின்னணு இசைக் கருவிகளின் விளம்பரத் தூதராக இவர் இருப்பார்.

இந்தியாவில் கீ-போர்டுக்கான விற்பனைச் சந்தை குறைவாக இருந்த போதிலும் அது வளர்ந்து வருகிறது. நிறுவனத்தின் விளம்பரத்தூதராக ரஹ்மானை நியமித்துள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் குல்பூஷண் சேத் தெரிவித்தார்.

தங்களது குழந்தைப் பிராயத்தில் கேசியோ கீ போர்டை பலர் பயன்படுத்தியிருப்பர். ஆனால் தொழில் முறையிலானவர்களுக்கான தரமான கீபோர்டை இந்நிறுவனம் தயாரிக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஏ.ஆர். ரஹ்மானை நியமித்ததன் மூலம் இத்தகைய மாயத் தோற்றம் மறைந்து தங்களது தயாரிப்பு மேலும் பிரபலமடையும் என நம்புவதாக அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in