டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு
Updated on
1 min read

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 காசுகள் உயர்ந்துள் ளன. ஒரு கட்டத்தில் 69 காசுகள் வரை முன்னேறிய வர்த்தகம் இறுதியில் ஒரு டாலருக்கு 57 காசுகள் வரை குறைந்து ரூ. 68.53 என்ற அளவில் வர்த்தகமானது. கடந்த 7 மாதங்களில் ரூபாயின் மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந் தது இதுவே முதல் முறை. மார்ச் மாதத்தில் சுமார் 365 கோடி டாலர் அளவுக்கு கடன் பத்திரங் களில் அந்நிய முதலீடு மேற் கொள்ளப்பட்டது முக்கிய காரண மாகும். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 69.10 என்ற அளவில் இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in