2-வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவு

2-வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவு
Updated on
1 min read

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவில் முடிந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் கூட்டத்தொடர் நடக்க இருக்கின்றது. இதில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சப்படுவதால் பங்குச்சந்தையில் லாபத்தை வெளியே எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மேலும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக-வுக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன. சென்செக்ஸ் 324 புள்ளிகள் சரிந்து 26492 புள்ளியில் முடிந்தது. நிப்டி சரிந்து 8000 புள்ளிகளுக்கு கீழே முடிந்தது. 109 புள்ளிகள் சரிந்து 7932 புள்ளியில் நிப்டி முடிவடைந்தது.

தொடர்ந்து 11 வர்த்தக தினங்களாக உயர்ந்து வந்த மிட்கேப் குறியீடு செவ்வாய்க் கிழமை 3.4 சதவீதம் சரிந்தது. அதேபோல கடந்த எட்டு வர்த்தக தினங்களாக உயர்ந்து வந்த ஸ்மால்கேப் குறியீடு 4 சதவீதம் சரிந்து முடிந்தது.

அனைத்து துறை குறியீடுகளும் சரிந்தே முடிவடைந்தன. இதில் ரியால்டி குறியீடு 3.42 சதவீதமும், பவர் குறியீடு 3.26%, பொதுத்துறை குறியீடு 3.12% மற்றும் இன்பிரா குறியீடு 3.05 சதவீதம் சரிந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பங்குகளில் டாக்டர் ரெட்டீஸ், ஹெச்.யூ.எல்., ஐடிசி, இன்போசிஸ் மற்றும் சன் பார்மா உயர்ந்தும், டாடா பவர், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, ஓ.என்.ஜி.சி மற்றும் எல் அண்ட் டி ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறிதளவு உயர்ந்து 61.08 ரூபாயாக இருக்கிறது. திங்கள்கிழமை வர்த்தகத்தின் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.74.59 கோடிக்கு பங்குகளை விற்றிருக்கிறார்கள்.

பி - நோட் முதலீடு அதிகரிப்பு

இந்திய சந்தையில் பி-நோட் மூலமாக முதலீடு செய்யும் தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்திருக்கிறது. செபி தகவல்கள்படி கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 2.11 லட்சம் கோடி (பங்குச்சந்தை, கடன் சந்தை மற்றும் டெரிவேட்டிவ்) முதலீடு வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் இந்த தொகை ரூ.2.08 லட்சம் கோடியாக இருந்தது. ஜூன் மாதம் இது ஆறு வருடங்களில் இல்லாத அளவான ரூ.2.24 லட்சம் கோடி முதலீடு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in