

இந்தியா விரைவிலேயே 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக வளரும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இந்தியா - கொரியா வர்த்தகக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தாவது:
இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளது. இதற்கு அடிப்படை கட்டமைப்பு உறுதியாக இருப்பதே காரணம். இதனால் விரைவிலேயே 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா உயரும். திறந்தநிலை பொருளாதாரக் கொள்கையின் மூலம் இந்தியா கடந்த நான்கு ஆண்டுகளில் 25,000 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. எந்த ஒரு மிகப் பெரிய பொருளாதார நாடும் ஆண்டுக்கு 7 சதவீத வளர்ச் சியை எட்டவில்லை. ஆனால் இந்தியா வளர்ந்து வருகிறது.
50-வது இடம்தான் இலக்கு
சர்வதேச அளவில் தொழில் புரிய எளிதான சூழல் உள்ள நாடுகள் குறித்து உலக வங்கி நடத்திய பட்டியலில் இந்தியா 77-வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு 50-வது இடத்துக்கு முன்னேறுவதுதான் இலக்கு. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு அரசின் மிகப் பெரும் பொறுப்பே வளர்ச்சிக்கு தேவை யான நடவடிக்கைகளுக்கு உறுது ணையாக இருப்பதுதான். அந்த வகையில் இந்தியாவில் வாய்ப்பு களும் வளங்களும் ஏராளமாக உள்ளன என்றார்.