Last Updated : 09 Jan, 2019 10:27 AM

 

Published : 09 Jan 2019 10:27 AM
Last Updated : 09 Jan 2019 10:27 AM

ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் பொறுப்பேற்பு

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமை பொருளாதார ஆலோசகராக இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் கீதா கோபிநாத் (47) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உயரிய பதவியை எட்டிய முதலா வது பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மைசூரில் பிறந்த இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள இவர் ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்த மௌரிஸ் அப்ஸ்பீல்டு பதவி ஓய்வு பெற்றதையடுத்து இவர் பொறுப்பேற்றுள்ளார். கடந்த அக்டோபர் 1-ம் தேதியே இப்பதவிக்கு கீதா கோபிநாத் நிய மிக்கப்படுவதாக ஐஎம்எப் தலை வர் கிறிஸ்டைன் லெகார்டு அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இப்பொறுப்புக்கு வந்துள்ள 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராவார். இவரது நிய மனத்தை மிகப் பெரிய கவுரவம் என ஹார்வர்டு பல்கலைக்கழக இதழில் குறிப்பிட்டுள்ளது.

உலகமயமாக்கல் நடவடிக்கை ஐஎம்எப்-புக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கீதா கோபி நாத் குறிப்பிட்டுள்ளார். 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு உலக மயமாக்கல் பிரச்சினை கிடையாது. இப்போது நாடுகளிடையே வரி யுத்தம், பிரெக்ஸிட் பிரிவினை உள்ளிட்டவை பெரும் சவாலாக இருக்கும் என்று மேலும் கூறினார்.

அன்னியச் செலாவணி முதலீடுகளை ஈர்ப்பதில் அனைத்து நாடுகளும் ஆர்வமாக உள்ளன. ஆனால் நாடுகளின் பாதுகாப்பும் இதில் அடங்கியுள்ளது. வர்த்தகம் அதிகரிப்பதால் நாடுகளில் வறுமை ஒழிந்துள்ளது உண்மைதான். ஆனால் உலகமயமாக்கல் மற்றும் பன்மயமாதல் சூழலில் சவால்கள் அதிகமாக உள்ளன என்றார்.

நாடுகளின் செலாவணி மதிப்பு சரிவது, பணவீக்கம் அதிகரிப்பது ஆகியவையும் பெரும் அச் சுறுத்தலாக உள்ளதாக கீதா கோபிநாத் குறிப்பிட்டுள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x