என்சிஎல்டி உதவியால் ரூ.80 ஆயிரம் கோடி வாராக்கடன் மீட்பு: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெருமிதம்

என்சிஎல்டி உதவியால் ரூ.80 ஆயிரம் கோடி வாராக்கடன் மீட்பு: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெருமிதம்
Updated on
1 min read

தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப் பாயத்தின் (என்சிஎல்டி) உதவியால் வங்கிகள் ரூ. 80 ஆயிரம் கோடி வாராக்கடனை மீட்டுள்ளன என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறி னார். வரும் மார்ச்சுக்குள் மேலும் ரூ. 70 ஆயிரம் கோடி மீட்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இது குறித்து நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் ‘திவால் சட்டத்தின் இரண்டு ஆண்டுகள்’ என்ற தலைப்பில் கூறியதாவது,

நிறுவனங்கள் கடன் சுமையால் திவால் ஆவதைத் தடுக்க காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியை அடைந்துள்ளன. ஆனால், திவாலான நிறுவனங்கள் வாங்கிய கடனை மீட்பதில் பாஜக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காகவே திவால் சட்டம் கொண்டுவரப்பட்டது.

திவால் சட்டம் அமல்படுத்தப் பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகி யுள்ள நிலையில் இதுவரை தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தின் மூலம் ரூ. 80 ஆயிரம் கோடியை வங்கிகள் மீட்டுள்ளன. திவால் சட்டத்தைச் செயல்படுத்தி வரும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பா யம், இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை 1,322 வழக்குகளை ஏற்றுக் கொண்டுள்ளது. 4,452 வழக்கு களை ஆரம்ப கட்டத்திலேயே நிரா கரித்துள்ளது. ஏற்றுக்கொள்ளப் பட்ட வழக்குகளில் 66 வழக்கு களுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள் ளன. தீர்வுகள் எட்டப்பட்ட இந்த வழக்குகளிலிருந்து ரூ. 80 ஆயிரம் கோடி மீட்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், பூஷன் பவர் அண்ட் ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் உள்ளிட்ட 12 பெரிய வழக்குகள் முடிவுறும் நிலையில் உள்ளன. எனவே வரும் மார்ச்சுகுள் மேலும் ரூ. 70,000 கோடி வாராக்கடன் மீட்கப்படுவ தற்கு வாய்ப்புள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in