

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 101.07 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.
இந்நிறு வனம் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை விட 18 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ. 122.74 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் வருமானம் 15 சதவீதம் அதிகரித்து ரூ. 1,216 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தி ல் வருமானம் ரூ. 1,061 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் செலவு ரூ. 910 கோடியிலிருந்து ரூ. 1,085 கோடியாக அதிகரித்துள்ளது.
சிமென்ட் விற்பனை அளவு 22.74 லட்சம் டன்னிலிருந்து 27.47 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.