வர்த்தகப் போரால் உலக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

வர்த்தகப் போரால் உலக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
Updated on
1 min read

நாடுகளிடையிலான வர்த்தகப்போர், அதிகரித்து வரும் உலக வெப்ப மயமாதல் உள்ளிட்ட காரணங்க ளால் உலகின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

சர்வதேச அளவிலான வளர்ச்சி ஸ்திரமாக 3 சதவீத அளவுக்கு நடப்பு ஆண்டிலும் 2020-ம் ஆண்டிலும் வளரும். ஆனால் நாடுகளிடையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் மற்றும் உலக வெப்பமயமாதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வளர்ச்சி குறையும் என எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறை தயாரித்துள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொரு ளாதார நிபுணர் எலியட் ஹாரிஸ், நாடுகளிடையிலான வர்த்தக போர் காரணமாக பன்முக வர்த்தகம் பாதிக்கப் படும். இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு சர்வதேச அள வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது நாம் கண்டு வரும் வளர்ச்சியானது ஒருங்கிணைந்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தக நடை முறைகளால் உரு வானது. இதில் பாதிப்பு ஏற்படும் போது அது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன பொருள்கள் மீது அதிக வரி விதித்தார். அதேபோல கனடா, மெக்சிகோ இடையிலான வர்த்தக பேரங்களும் நடைபெற்றன.

இதேபோல உலகின் தட்ப வெப்ப நிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லை. இதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு வளர்ச்சி பாதிக்கப்படும். இது பொருளாதார பின்னடைவுக்கு வழி வகுக்கும் என்றார். இது நீண்ட கால சவாலாகும். இது பொருளாதாரத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நடப்பாண்டில் அமெரிக்காவின் பொரு ளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாகவும், 2020-ல் இது 2 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது. ஐரோப்பிய யூனியனைப் பொருத்தமட்டில் ஸ்திம ரான 2 சதவீத வளர்ச்சி சாத்தியம். ஆனால் பிரெக்ஸிட் பிரிவினைக்குப் பிறகு வளர்ச்சியில் தொய்வு ஏற்படலாம் என்றார். சீனாவின் வளர்ச்சி நடப் பாண்டில் 6.3 சதவீத அளவுக்கு இருக் கும் என்றும் இது கடந்த ஆண்டில் 6.6 சதவீதமாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in