

இறக்குமதி செய்யப்படும் ரப்பர் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும் அல்லது பொருள் குவிப்பு வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள பகுதியைச் சேர்ந்த இயற்கை ரப்பர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் ஒரு கிலோ ரப்பர் விலை ரூ. 171 ஆக இருந்தது இப்போது ரூ. 144 ஆகக் குறைந்து விட்டது. இந்நிலையில் சிறிய அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களைக் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.