

சீனாவின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான அலிபாபா புதிய பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் 2,430 கோடி டாலரை திரட்ட இருக்கிறது.
தற்போதைய நிலைமையில் ஒரு டெக்னாலஜி நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் அதிக தொகையை திரட்டுவது அலிபாபாதான். இருந்தாலும் எந்த விலையில் பங்குகளை திரட்டுவது என்பது குறித்த இறுதி அறிவிப்பு வரவில்லை. பேஸ்புக் நிறுவனம் 1,600 கோடி டாலரை கடந்த 2012-ம் ஆண்டு திரட்டியதுதான் இதுவரை ஐபிஓ மூலம் திரட்டிய அதிகதொகையாக இருந்தது.
பிபிசி தகவல்படி சீனாவில் ஆன்லைன் மூலம் விற்பனையாகும் பொருட்களில் 80 சதவீதம் அலிபாபா வசம் இருக்கிறது.
15 வருடங்களுக்கு முன்பு ஜாக் மா என்பவரால் ஆரம்பிக் கப்பட்டது இந்த நிறுவனம். ‘வாடிக்கையாளர்கள் முதலில், பணியாளர்கள் இரண்டாவது மற்றும் பங்குதாரர்கள் மூன்றாவது’ என்று சொல்லுபவர் ஜாக் மா. ஐபிஒ குறித்து தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு ஜாக் மா கடிதம் எழுதி இருக்கிறார்.