Published : 29 Jan 2019 10:52 AM
Last Updated : 29 Jan 2019 10:52 AM

ரூ. 5,500 கோடிக்கு தமிழக அரசுடன் எஸ்பிஆர் குழுமம் ஒப்பந்தம்

தென்னிந்தியாவில் பிரபலமாக திக ழும் ரியல் எஸ்டேட் நிறுவனமான எஸ்பிஆர் குழுமம் ரூ.5,500 கோடிக்கு தமிழக அரசுடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையில் சமீபத்தில் முடி வடைந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 7 ஆண்டுகளில் ரூ. 5,500 கோடியை முதலீடு செய்ய எஸ்பிஆர் குழுமம் முன் வந்துள்ளது.

ஒருங்கிணைந்த டவுன்ஷிப் உரு வாக்கம் உள்ளிட்ட நடவடிக்கையில் இந்நிறுவனம் ஈடுபடும். இவற்றில் சென்னை பெரம்பூரில் 65 ஏக்கரில் அமைந்துள்ள பின்னி மில் வளாகத்தில் புதிய டவுன்ஷிப் உருவாக்கமும் அடங்கும். மார்க் கெட் ஆப் இந்தியா என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்தப் பகுதியில் குடியிருப்புகள், சர்வதேச தரத் திலான பள்ளி, அங்காடிகள் (மால்) மற்றும் அலுவலகங்கள் அமையும்.

இதன் மூலம் 1.33 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 150 சதுர அடி விரிவாக்கம் மூலம் நேரடியாக ஒருவருக்கும், மறைமுகமாக 3 பேருக்கும் வேலை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் படி இங்கு 55 லட்சம் சதுர அடி பரப்பளவில் டவுன்ஷிப் உரு வாகிறது.

இதில் 30 லட்சம் சதுர அடியில் வணிக வளாகம் உருவாக்கப்படும். இது தவிர 25 லட்சம் சதுர அடி பரப்பானது கட்டமைப்பு மற்றும் கிடங்கு வசதி மற்றும் பார்க்கிங் வசதிகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இங்கு 5 ஆயிரம் கடைகள், 3 சில்லரை வர்த்தக நிறுவனங்கள், சர்வதேச தரத்திலான கிடங்குகள், வர்த்தகத்துக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே இங்கு 5 ஆயிரம் கடைகள் அமைக்க வர்த்தகர்கள் முன்வந்து ஒப்பந்தம் செய்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிதேஷ் பி கவாட் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரி தனது சர்வதேச பள்ளியை அமைக்க முன்வந்துள்ளது. அதே போல லைஃப்ஸ்டைல், மாக்ஸ், பிவிஆர் சினிமா, வெஸ்ட்சைட் ஆகிய சங்கிலித் தொடர் நிறு வனங்களும் தங்களது அங்காடிகள் மற்றும் திரையரங்குகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள் ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x