

மத்திய அரசு கொண்டுவந்த திவால் சட்டத்துக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளு படி செய்துள்ள உச்ச நீதிமன்றம், பல ஆயிரம் கோடி வாராக்கடனை மீட்பதில் வெற்றிபெற்றிருப்பதால் திவால் சட்டத்தை அவசியமான சட்டம் என அங்கீகரித்து உறுதி செய்துள்ளது.
கடன் வாங்கி திருப்பிச் செலுத் தாமல் திவாலாகும் நிறுவனங் களிடமிருந்து கடனை மீட்க உரு வாக்கப்பட்டது திவால் சட்டம். திவாலாகும் நிறுவனங்கள் மீது நட வடிக்கைகள் எடுக்கவும், சொத்து களைக் கைப்பற்றி ஏலத்தில் விட்டு கடனை மீட்கவும் இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது.
இந்திய வங்கிகளில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் வாராக்கடனாக உள்ள தொகை ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த திவால் சட்டம் மிகவும் முக்கிய மாக பார்க்கப்பட்டது.
இந்தச் சட்டத்தை தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் செயல்படுத்தும் அதிகாரம் கொண் டுள்ளது.
2016-ல் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தின் உதவியால் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் இதுவரை ரூ. 80 ஆயிரம் கோடி வாராக்கடனை மீட்டுள்ளதாக அருண் ஜேட்லி கூறியிருந்தார். இந்தச் சட்டத் தின் கீழ் 1,322 வழக்குகள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் திவால் சட்டத்துக்கு எதிராகப் பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். நேற்று திவால் சட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து வழக்கு களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், திவால் சட்டம் அவசிய மானது, அதன் மூலம் பல ஆயிரம் கோடி வாராக்கடன்கள் மீட்கப் பட்டுள்ளன என்று கூறி சட்டத்தை அங்கீகரித்து உத்தரவிட்டது.
கடனில் மூழ்கி திவா லாகும் நிலையிலுள்ள நிறுவனங் கள் மற்றும் அதன் தொழிலதிபர் களுக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிராக அமைந்துள்ளது.