Published : 06 Jan 2019 09:18 AM
Last Updated : 06 Jan 2019 09:18 AM

என்பிஎப்சி-கள் குறித்த தகவல் இருந்திருந்தால் நிதி புழக்கத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை தவிர்த்திருக்கலாம்: சுபாஷ் சந்திர கார்க் தகவல்

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) குறித்த முழுமையான விவரத் தொகுப்பு (டேட்டா) கிடையாது. ஒருவேளை அது இருந்திருந்தால் தற்போது ஏற்பட் டுள்ள நிதி புழக்க தட்டுப்பாட்டை தவிர்த்திருக்கலாம் என்று பொரு ளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்தார்.

ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத் தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து என்பிஎப்சி-களின் பணப் புழக்கத்தில் தேக்க நிலை ஏற் பட்டது. இதைப் போக்குவது தொடர்பாக மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் இணைந்து எத்த கைய நடவடிக்கை எடுக்கலாம் என் பது குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆனால் என்பிஎப்சி- கள் பற்றி முழுமையான தகவல் தொகுப்பு இல்லை என்றார்.

ஐஎல்அண்ட் எப்எஸ் நிதி நெருக் கடி காரணத்தால் மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களான டிஹெச் எப்எல் மற்றும் இண்டியாபுல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் பெருமளவு சரிந்தன. இப்போதைய சூழலில் என்பிஎப்சி-களை முறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசர அவசியமாகும். என்பிஎப்சி-களை காப்பாற்றும் அதேவேளையில் அதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் நல னையும் காக்க வேண்டியுள்ளது. ஐஎல்அண்ட் எப்எஸ் நிதி நிறு வனத்தில் பிரச்சினை ஏற்பட்ட பிறகு தான் என்பிஎப்சி நிறுவனங்கள் குறித்து போதிய தகவல் தொகுப்பு இல்லை என்பது புலனானது என் றார். இப்போதைய சூழலில் எந்த என்பிஎப்சி-யுடன் பேச்சு நடத்துவது எப்படி என்றே புரியவில்லை என்றார். என்பிஎப்சி-கள் குறித்து மாதாந்திர அடிப்படையில் கூட தகவல் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x