

இந்த ஆண்டிலேயே பேட்டரியில் இயங்கும் லீஃப் மாடல் காரை அறிமுகப்படுத்தப் போவதாக நிசான் நிறுவனத்தின் துணைத் தலைவர் பேமென் கார்கர் தெரி வித்தார்.
டெல்லியில் நிறுவனத்தின் புதிய மாடல் எஸ்யுவி காரான கிக்ஸ் அறிமுக விழாவில் பேசுகை யில் இந்தியாவில் பேட்டரி வாக னங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு லீஃப் மாடலைஅறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து உலகின் பிற பகுதிகளில் ஓடும் தங்கள் நிறுவனத்தின் பிற மாடல் பேட்டரி கார்களையும் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிசான் நிறுவனத்தின் லீஃப் மாடல் பேட்டரி கார் பிற நாடு களில் 2010-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த மாடல் கார்கள் 3.5 லட்சம் வரை விற்பனையாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்திய சந்தைக்கேற்ப இதன் விலை நிர்ணயிக்கப்படும் என்றார்.