

இடைக்கால நிதி அமைச்சராக நிய மிக்கப்பட்டுள்ள ரயில்வே அமைச் சர் பியுஷ் கோயல் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் மற்றும் சிஇஓ-க்களை இன்று சந்திக்க உள்ளார்.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மருத் துவ சிகிச்சையில் இருப்பதால், ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் இடைக்கால நிதி அமைச்சராக நியமிக்கப்பட் டார். பெரும்பாலும் பியுஷ் கோயல் தான் பட்ஜெட் தாக்கல் செய் வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில் இன்று பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளார் பியுஷ் கோயல். இந்தச் சந்திப்பில் வங் கித் துறையின் தற்போதைய நிலை குறித்தும், வங்கிகளின் நிதி நிலையை உயர்த்துவதற்கான வழி கள் என்னென்ன என்பது குறித்தும் விவாதிப்பார்கள் எனக் கூறப்படு கிறது.
மேலும், வாராக்கடன் நிலை குறித்தும், சிறு, குறு மற்றும் நடுத் தர தொழில்கள், விவசாயம் மற் றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கும் கடன்கள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்பில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸும் கலந்துகொள்கிறார். பிப்ரவரி 7-ம் தேதி இவர் தனது முதல் நிதிக் கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளார். இன்று நடக்கும் விவாதத் தின் அடிப்படையில் நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.