Published : 17 Dec 2018 08:54 AM
Last Updated : 17 Dec 2018 08:54 AM

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியதால் இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது: நிதி அமைச்சகம் தகவல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, பல்வேறு அத்தியாவசியப் பொருள் களின் வரி விகிதம் குறைந்துள்ள தால் இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு சராசரியாக மாதத்துக்கு ரூ. 320 அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நுகர்வோர் செலவு புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்ட பிறகு, தானியங்கள், சமையல் எண்ணெய் மற்றும் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை குறைந் துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பொருள்களின் விலைக் குறைவால் நுகர்வோர் செலவு செய்யும் தொகை குறைந்துள்ளது. இதனால், இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு அதிகமாகியுள்ளது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த வருடம் ஜூலை 1ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி நடை முறைப்படுத்தப்பட்டது. முன்பு பல்வேறு தனித்தனி வரிகளாக இருந்த மத்திய, மாநில கலால் வரி, விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி போன்ற 17க்கும் மேற்பட்ட வரிகளை ஒன்றிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி என அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு பொருளின் மீதும் இருந்த வரிக்கு வரி என்ற நிலையை மாற்றியது.

இந்நிலையில் ஜிஎஸ்டி அமல் படுத்தப்பட்டு ஓராண்டு நிறை வடைந்த நிலையில், ஜிஎஸ்டி அமல் படுத்தப்படுவதற்கு முன்பு இருந் ததைக் காட்டிலும் 83க்கும் மேலான பொருள்களின் மீதான வரி குறைந்துள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. முக்கியமாக, தினசரி பயன்படுத்தும் எண்ணெய், பற்பசை, சோப், துணிப்பவுடர் மற்றும் காலணி ஆகியவற்றுடன் உணவுப் பொருள்கள், தானியங்கள் உள்ளிட்டவற்றின் மீதான வரி குறைந்துள்ளது.

இந்தியக் குடும்பங்கள் முக்கிய மான பத்து பொருள்களுக்கு மாதம் ரூ. 8,400 செலவழிக்கிறார்கள் எனில், ஜிஎஸ்டிக்கு முன்பு வரியாகச் செலுத்தப்பட்ட தொகை ரூ. 830. ஆனால், ஜிஎஸ்டிக்குப் பிறகு செலுத்தும் தொகை ரூ. 510. இதன் மூலம் ரூ. 320 மாதம் சேமிக்க முடிகிறது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x