Published : 30 Sep 2014 11:01 AM
Last Updated : 30 Sep 2014 11:01 AM

அனுப் பிரகாஷ் - இவரைத் தெரியுமா?

# ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

# ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். அதன் பிறகு அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றியவர்.

# கடற்படையில் நான்கு வருடங்கள் பணிபுரிந்த பிறகு அங்கிருந்து விலகி ஹார்ட்வேர்ட் நிர்வாக கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றார். எம்.பி.ஏ. முடித்த பிறகு மெக்கென்ஸி நிறுவனத்தில் ஆலோசகராக இரண்டு வருடங்கள் பணியாற்றினார்.

# இதன் பிறகு ஆரக்கிள் உள்ளிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றினார். அமெரிக்கா அரசின் நகர்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி துறையில் சில மாதங்கள் பணியாற்றினார்.

# கடற்படையில் பணியாற்றியவர் என்பதால் காலையில் சீக்கிரம் எழும் பழக்கம் உடையவர். நீண்ட மீட்டிங்குகளை வெறுப்பவர். குறுகிய கலந்துரையாடல்களில் முடிவெடுக்க விரும்பும் குணம் உடையவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x