இம்மாத இறுதிக்குள் 3 அரசு வங்கிகள் இணைப்பு 

இம்மாத இறுதிக்குள் 3 அரசு வங்கிகள் இணைப்பு 
Updated on
1 min read

விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி ஆகிய மூன்று வங்கி களையும் இணைப்பதற்கான திட் டம் இம்மாத இறுதிக்குள் செயல் படுத்தப்படும் எனக் கூறப்பட் டுள்ளது.

விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி ஆகிய வற்றை இணைக்கும் திட்டம் இம் மாதத்தில் இறுதி செய்யப்பட்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை யில் நடக்கும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் சமர்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் இணைப்புக்கு பிறகு செயல்படுத்துவதற்கான தேவை யான நிதி ஒதுக்கீடு செய்யப் படும் என்று மத்திய அரசு தெரி வித்துள்ளது. இணைக்கப்பட்ட வங்கிகளை புதிய நிதியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வும் தி்ட்டமிடப்பட்டுள்ளது.

முன்பு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் அதன் 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மூன்று வங்கிகளை இணைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த இணைக்கப் பட்ட வங்கியில் ரூ.14.82 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி களுக்கு அடுத்து பெரிய வங்கியாக இந்த வங்கி திகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்புக்குப் பிறகு இந்த வங்கியின் நிகர வாராக்கடன் விகிதம் 5.71 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in