

ஏப்ரல் முதல் நவம்பர் வரை யிலான 8 மாத காலத்தில் ஜி.எஸ்.டியில் ரூ.12,000 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை அரசு கண்டு பிடித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்தின் அதிகாரி ஜான் ஜோசப் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜி.எஸ்.டியில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது இ-வே பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் ஏப்ரல்-நவம்பர் மாதம் வரையிலான 8 மாத காலத்தில் ஜி.எஸ்.டி யில் ரூ.12,000 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மத்திய கலால் மற்றும் சுங்க வரி நடைமுறையில் இருந்த காலத்தை விட மிக அதிகமாகும். மேலும், வரி ஏய்ப்பவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளால் வரி ஏய்ப்பு செய்தவர்களிடமிருந்து ரூ. 8 ஆயிரம் கோடி மீட்கப்பட்டுள்ளது