Published : 24 Dec 2018 11:08 AM
Last Updated : 24 Dec 2018 11:08 AM

தாவோஸ் உலகப் பொருளாதார மாநாடு: 100 இந்திய தொழிலதிபர்களுடன் அருண் ஜேட்லி பங்கேற்பு

சுவிசர்லாந்தின் தாவோஸ் நகரில் ஜனவரி 21 முதல் 25 வரை நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் 100 முன்னணி இந்திய நிறுவனங்களின் தலைவர்கள், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அமைச்சரை உறுப்பினர்கள், சில மாநில முதல்வர்கள் கலந்துகொள் வதாகத் தகவல்கள் வெளியாகியுள் ளன. மாநாட்டில் நான்காம் தலை முறை உலகமயமாக்கல் பொருளா தாரம் குறித்து விவாதிக்க உள்ளனர்.

இந்த ஆண்டு தாவோஸில் நடக் கும் உலகப் பொருளாதார மாநாட் டில், மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா, உலக வங்கியின் தலை வர் ஜிம் யாங் கிம் ஆகியோருடன், பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்தியாவிலிருந்து நிதி அமைச் சர் அருண் ஜேட்லி மற்றும் சில அமைச்சர்கள் கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 100 இந்திய நிறுவனங்களின் நிர்வாகி களும் கலந்துகொள்கின்றனர். முகேஷ் அம்பானி, அசிம் பிரேம்ஜி, கவுதம் அதானி, உதய் கோடக் ஆகியோரும், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர். மத்தியப் பிரதேசம், ஆந்திரா, மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங் களின் முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில், உலகமய மாக்கல் 4.0 பற்றி விவாதிக்க உள்ளனர். அதாவது நான்காம் தலைமுறை உலகமயமாக்கல் பொருளாதாரப் புரட்சி.

இது குறித்து உலகப் பொருளா தார மாநாட்டு அமைப்பின் தலைவர் கிளாஸ் ஸ்குவாப் கூறியதாவது, “உலகமயமாக்கல் அதன் உச்சத் தில் இருக்கலாம். ஆனால், சர்வ தேச ஒருங்கிணைப்பு என்பது தொடர வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால் நான் காம் தலைமுறை பொருளாதார புரட்சியை நாம் முன்னெடுக்க வேண்டும். இதில், பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம், ஆட்டோமேஷனால் வேலைவாய்ப் புகள் குறைவது போன்ற சவால் களை உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தத் தொழில் புரட்சி, வருங்கால தலைமுறையினரைப் பாதிக்கக்கூடியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x