

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் புதிய வேலைவாய்ப்பு கள் இல்லாத வளர்ச்சி என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறினார். 2017-18 நிதி ஆண்டில் மட்டுமே 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டிருப்பதாக விளக்கம் கூறியுள்ளார்.
சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாஜக தலைமை யிலான ஆட்சியில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உரு வாகும் என்று கொடுக்கப்பட்ட வாக் குறுதி வெறும் ஏமாற்று வித்தை என்று குற்றம்சாட்டினார். இவ ருடைய குற்றச்சாட்டுக்கு பதிலளிக் கும் வகையில் நிதி ஆயோக் அமைப் பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் இந்தத் தகவலைக் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டு கால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், போதுமான அளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன என்று ராஜிவ் குமார் கூறினார். இதனை பணியாளர்கள் சேமநல நிதி நிறுவனத்தின் புள்ளி விவரங்களும், முத்ரா கடன் திட்டத் தில் வழங்கப்பட்டுள்ளப் பெருமளவிலான கடன்களின் புள்ளிவிவரங்களும் உறுதிசெய் கின்றன என்றார்.
இது குறித்து அவர் கூறுகை யில், “மாண்புமிகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்த புள்ளி விவரங்கள் பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. அவருடைய குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யா னது. இபிஎஃப்ஓ நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 2017-18 நிதி ஆண் டில் மட்டுமே 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள் ளன. ஆட்டோமொபைல் துறை யில் உற்பத்தியும் விற்பனையும் அபரிமிதமான வளர்ச்சி கண் டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பின்மை சூழல் அதிகரிக்கிறது என்றால், நகரங்களிலும், கிராமங்களிலும் வழங்கப்பட்டுவரும் ஊதிய அளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்க வில்லை. எனவே எந்த ஒரு அடிப் படையும் இல்லாமல் அரசின் மீது குற்றம்சாட்டப்படுகிறது” என்றார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அரசு பெரிய அளவில் உயர்த்தி யிருக்கிறது. கிராமப்புற பொருளா தாரம் சிறப்பாக இருக்கிறது. விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது என்றார்.
நிதி ஆயோக் தயார் செய்து வரும் ‘புதிய இந்தியா 2022’ அறிக்கை தயாராகிவிட்டதாகவும், விரைவில் அது பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இந்த அறிக்கையில் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையான உத்திகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.