Published : 31 Dec 2018 08:55 AM
Last Updated : 31 Dec 2018 08:55 AM

பண்டமாற்று முறையை மீண்டும் கொண்டுவரும் ரயில்வே: நிறுவனங்களின் பொருள்கள், சேவைகளுக்குப் பதிலாக விளம்பர உரிமை

பண்டையக் கால பண்டமாற்று முறையை மீண்டும் செயல்படுத்தும் ஒரு கொள்கையை ரயில்வே துறை கொண்டுவந்துள்ளது. ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள், சேவைகளுக்கு பண மாகத் தராமல் நிறுவனங்களை விளம்பரம் செய்துகொள்ள அனுமதிக்கிறது.

இதற்கான கொள்கையை ரயில்வே இயக்குநர் குழுவின் மாற் றங்களைத் திட்டமிடும் குழு வரைவு செய்துள்ளது. அந்தக் குழு கூறியுள்ளபடி நிறுவனங்கள் ரயில்களில் பயணிக்கும் பயணி களுக்கு வழங்கும் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்குப் பதி லாக ரயில்களில் விளம்பரம் செய்து கொள்ளலாம். இந்த கொள்கை வரைவு இயக்குநர் குழுவில் விவா திக்கப்பட்டு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதை சோதனை முறையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்த உத்தரவுகளை ரயில்வே துறையின் அனைத்து பொது மேலாளர்களுக்கும் டிசம்பர் 27-ம் தேதி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் மூத்த அதி காரி ஒருவர் கூறியதாவது, பண்ட மாற்று முறையில் பணப் பரிமாற் றமே இல்லை. இந்தப் பழைய முறையை இன்றையக் காலத்தில் முயற்சித்துப் பார்க்கிறோம். லட்சக் கணக்கான பயணிகள் ஒவ் வொரு நாளும் ரயில்களில் பயணிக் கின்றனர். நினைத்துப் பாருங்கள், நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு எப்படிப்பட்ட விளம்பரம் கிடைக் கும். இது நிறுவனங்களுக்கு மிகவும் லாபகரமானதாகும்.

ஆரம்பத்தில் பொருட்களை வைத்து சோதித்துப் பார்க்க உள் ளோம். அதாவது, சோப், டிஸ்பென் சர் மற்றும் போர்வைகள் உள்ளிட் டவை. நிறுவனங்கள் இந்தப் பொருட்களை வழங்கிவிட்டு, பதி லாக தங்களின் பிராண்டுகளை ரயில் களில் விளம்பரம் செய்துகொள்ள லாம். இதற்கான விண்ணப்பங்கள் ரயில்வே துறை இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 21 நாட்கள் அவகாசம். இந்த அவகாசம் முடிவடைந்த பிறகு ஒவ் வொரு பொருளுக்கும் ஒரு நிறு வனத்தைத் தேர்ந்தெடுத்து, அவர் களுக்கு இதற்கான வாய்ப்பை ரயில்வே துறை வழங்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x