Last Updated : 08 Dec, 2018 08:48 AM

 

Published : 08 Dec 2018 08:48 AM
Last Updated : 08 Dec 2018 08:48 AM

அந்நியச் செலாவணி மோசடி அச்சம்: கோல்டன் விசா முறையை ரத்து செய்தது பிரிட்டன்

பெரும் பணக்காரர்கள், தொழி லதிபர்களுக்கு கோல்டன் விசா வழங்கும் முறையை பிரிட்டன் திடீரென ரத்து செய்துள்ளது. அந்நியச் செலாவணி மோசடி அச்சம் காரணமாக இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இங்கிலாந்தில் பிரிவு -1 முதலீட் டாளர் விசா என்ற சிறப்பு விசா வழங்கும் முறை 2008-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்தியா, சீனா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த குடி மக்களுக்கு இந்த சிறப்பு விசா அதாவது கோல்டன் விசா முறையை பிரிட்டன் பின்பற்றி வந் தது. இதில் விசா பெறுவோர் இங்கி லாந்தில் நிரந்தர குடியுரிமை பெற முடியும்.

இந்த முறையை பலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் அந்நியச் செலாவணி மோசடி குற்றங்கள் பெருகுவதாகவும் சந் தேகித்ததைத் தொடர்ந்து இந்த உத் தரவை பிரிட்டன் ரத்து செய்தது.

முன்னாள் ரஷிய ஏஜென்ட் மற் றும் அவரது மகள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் கடந்த மார்ச் மாதம் லண்டனில் நிகழ்ந் தது. கோல்டன் விசா மூலம் வந்தவர் களால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிலர் குறிப்பிட்டனர். இதுவும் இந்த சட்டம் ரத்து செய்யப்பட ஒரு காரணம் என தெரிகிறது.

மேலும் பொருளாதார குற்ற வாளிகள் பிரிட்டனில் தஞ்சமடை வதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் நெருக்குதல் அளித்து வருகின்றன. மேலும் பிரெக்ஸிட் நிகழ்வுக்குப் பிறகு குடியேற்ற விஷயங்களில் புதிய அணுகுமுறையை பிரிட்டன் வகுக்கும் என தெரிகிறது.

2018 அக்டோபர் வரையான காலத்தில் ஆண்டுதோறும் இங் கிலாந்துக்கு இந்த விசா நடைமுறை மூலம் ரூ. 4,510 கோடி அளவிலான தொகை கிடைக்கிறது. கோல்டன் விசா விண்ணப்பதாரர்களுக்கு மிகக் குறைவான சோதனைகளே மேற்கொள்ளப்படுகிறது. இதில் உள்ள பலவித ஓட்டை களைப் பயன்படுத்தி பலர் இங் கிலாந்தில்நுழைந்துள்ளனர். இது 2015-ல் கண்டுபிடிக்கப்பட்டு அவை சரி செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தில் 3 ஆயிரம் பணக் காரர்கள் இங்கிலாந்தில் நுழைந் துள்ளனர். இவர்கள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 28,516 கோடியாகும். ஆனால் இது எந்த அளவுக்கு சட்ட பூர்வமானது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் ஐரோப்பிய யூனியன் குடியுரிமை விவகாரமும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் ரூ. 45 கோடி முதலீடு செய்து இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு நிரந்தர குடியுரிமை கோருவதற்கு கோல்டன் விசா விதிமுறைகள் அனுமதிக்கின்றன. இதையும் பலர் தவறாக பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்தே இந்த நடைமுறை நிறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்தியாவிலிருந்து தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடி இந்த கோல்டன் விசா முறை மூலம் இங்கிலாந்து சென்று அங்கிருந்து பெல்ஜியம் குடியுரிமை பெற்றுள் ளதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் விஜய் மல்லையா 1992-ம் ஆண் டிலிருந்தே இங்கிலாந்தில் நிரந்த குடியுரிமையை பெற்றுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடாக 2,500 கோடி யூரோ இந்த கோல்டன் விசா மூலம் வந்துள்ளது. அதே போல இத்திட்டத்தில் குடியுரிமை பெற்றவர்கள் எவ்வித பாதிப் பும் இன்றி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

சில கரீீபிய நாடுகளும் கோல் டன் விசா வழங்குகின்றன. அந்த வகையில் மெகுல் சோக்ஸி ஆன்டி குவா தப்பியதும் இந்த முறையில் என்பது தெரியவந்துள்ளது. ரூ.1.4 கோடி தொகை செலுத்தி அவர் ஆன்டிகுவா குடியுரிமை பெற்றுள் ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஆயிரம் இந்தியர் கள் 2017-ம் ஆண்டில் பிற வெளி நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கை யில் பெரும் செல்வந்தர்கள் உள்ள னர். 20,700 பெரும் கோடீஸ்வரர் களும், 3.30 லட்சம் கோடீஸ்வரர் களும் இந்தியாவில் உள்ளனர். உலகில் 6-வது செல்வந்த நாடாக இந்தியா திகழ்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x