

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால் விவசாயத் துறை அதிகம் பாதித்திருக்கிறது என்று முன்னாள் உலக வங்கி தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்திருப் பது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் வாங்கிய போது பேசிய இவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதைப் பற்றி சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது இந்தியத் தொழில்துறைகள் சிலவற்றில் ஏற் பட்டுள்ள அழுத்தம் ஒட்டுமொத்த இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத் தியுள்ளது. இதன் விளைவுகள் மேலும் அதிகமாகலாம் என்று கூறி யுள்ளார். புதிய வேலை வாய்ப்பு கள் உருவாக்கம் பெருமளவு குறைந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும் என்றார்.
பொருளாதார வளர்ச்சி பாதிப் பால் அதிகம் பாதித்திருப்பது விவ சாயத் துறை என்றவர் விவசாயத் துறையில் பாதிப்புகளைத் தெளி வாகப் பார்க்க முடிகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை விவசாயத் துறையை அதிகம் பாதித்துள்ளது என்றார்.