ஏர் இந்தியாவுக்கு சொந்தமான நிலம் விற்பனை: ரூ. 9 ஆயிரம் கோடி திரட்ட அரசு முடிவு

ஏர் இந்தியாவுக்கு சொந்தமான நிலம் விற்பனை: ரூ. 9 ஆயிரம் கோடி திரட்ட அரசு முடிவு
Updated on
2 min read

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் மற்றும் பிற சொத்துகளை விற்பதன் மூலம் ரூ. 9 ஆயிரம் கோடியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிலம், கட்டிடம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் ஏர் இந்தியாவுக்கு உள்ள கடன் சுமை ரூ. 55 ஆயிரம் கோடியைக் குறைக்க முடியும் என அரசு உறுதியாக நம்புகிறது.

கடந்த வாரம் மத்திய நிதி அமைச் சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத் தில் ரூ. 29 ஆயிரம் கோடி கடன் சுமையை எஸ்பிவி அடிப்படையில் ஏர் இந்தியா சொத்து நிர்வாக நிறுவனத்துக்கு மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்பட முடிவு செய்யப்பட்ட சொத்துகளில் மும் பையில் உள்ள ஏர்லைன்ஸ் ஹவுஸ், டெல்லி வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஏர் இந்தியாவுக்கு சொந்த மான இடம் மற்றும் கன்னாட் பிளேஸ் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பாபா கராக் சிங் மார்க் பகுதியில் உள்ள நிலம் ஆகியவையும் இதில் முக்கியமானவையாகும்.

இதே போல கடந்த வாரம் நடைபெற்ற ஏர் இந்தியா பங்கு விலக்கல் நடவடிக்கை தொடர் பான அமைச்சரவை குழு கூட்டத் தில் ஏர் இந்தியாவின் கிரவுண்ட் ஹாண்ட்லிங் துணை நிறுவனமான ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (ஏஐஏடிஎஸ்எல்) நிறு வனத்தை விற்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏஐஏடிஎஸ்எல் நிறுவனம் 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ. 61 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமையை படிப்படியாகக் குறைக் கும் நடவடிக்கையை மேற்கொண் டுள்ளோம். இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கு வதற்கு பிற நிறுவனங்கள் முன் வரும் என்பதாலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களை விற்பது தொடர்பான டெண்டரை இந்நிறு வனம் வெளியிட்டது.

மும்பையில் உள்ள 28 அடுக்கு மாடிக் குடியிருப்பு, அகமதாபாத் தில் உள்ள 7 குடியிருப்பு மற்றும் புணேயில் 2 அடுக்கு மாடிக்குடி யிருப்பு மற்றும் அலுவலக இடம் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான இடங்களை விற்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவில் அரசுக்குள்ள பங்குகளில் 76 சதவீதத்தை தனி யாருக்கு தர அரசு முன் வந்தது. அத்துடன் நிர்வாக பொறுப்பையும் தனியாரிடமே விட்டுவிட தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் எந்தவொரு நிறுவன மும் இதை வாங்க முன்வரவில்லை. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், இந்நிறு வனத்தை விற்கும் முடிவை அரசு தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமையைக் குறைத்து அதை பிற நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு உயர்த் தும் நடவடிக்கைகளை அரசு எடுத் துள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலங்கள் மற்றும் சொத்துகளை விற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in